Coimbatore | Tamilnadu | India |
03 NOV 2020
கார்மேகம் கட்டிக்கொண்டும் முட்டிக்கொண்டும் கண்ணைக் கசக்கிப் பிழிந்து, தூற்றிக் கொண்டு இருந்த கார்த்திகையின் மதிய வேளையில், என் வீட்டின் வெளியே சிட்டுக்குருவிகளின் சிணுங்கல் கேட்டது, தாயும் சேயுமாய் மழையில் ஊறிக்கிடந்த அரிசி, சோளக்குருணைகளை கொத்திக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும் அளவளாவித் திரிந்தன சிட்டுக்குருவிகள், சற்று தூரத்தில் ஒரு குருவி மட்டும் வெள்ளை வெளேரென்று "வெள்ளை அழகி " போல் தெரிய, முதலில் வேதிவால் குருவி தான் என்னைப்பார்க்க வந்து விட்டதோ என எண்ணினேன், ஆனாலும் வால் நீளம் குறைவாய் இருந்ததால், அதன் பெயரும் இனமும் தெரியவில்லை , உடனே என் புகைப்படக்கருவியில் அவளை படம் பிடித்து CNS மற்றும் முகநூல் அணியின் குருவிக்காரர்களிடம் பெயர் விவரங்கள் கேட்டேன், இதுவும் சிட்டுக்குருவியின் இனம் என்றும், மனிதனுக்கு சருமம் வெள்ளைப்படுதல் நோய் (வெண் குஷ்டம் )போல் இதுவும் பாதிக்கப்பட்டு இருக்கிறதென்றும், இதை பார்ப்பது அரிது என்றும் குருவிக்காரர்கள் மற்றும் கூகுள் மூலமும் தெரிந்து கொண்டேன், நேரில் பார்த்தவர்கள் வரிசையில் நானும் சேர்ந்து கொண்டேன.
மேலும் இந்த வெள்ளை நிறத்தால் இது போன்ற பறவைகள் வேட்டை பறவைகளிடம் எளிதில் அகப்பட்டு விடும், இது வாலிபப் பருவம் வரை வளர்வது அபூர்வம், அப்படியே வளர்ந்தாலும் இதற்கான இணை கிடைத்து இனப்பெருக்கம் செய்து ஜீவித்திருப்பது இறைஅருள், அவ்வருளாலே நான் கண்டு ரசித்து விட்டேன்.
நான் ரசித்த பறவையின் புகைப்படத்தை அனைவருக்கும் பகிர்ந்து உள்ளேன், உங்கள் பார்வைக்கு.
"யான் பெற்ற இன்ப பெறுக இவ்வையகம்"
நன்றி ! 💐 ! 🙏
- திருமூர்த்தி ந. வ.
ReplyDeleteஎனக்கென்னவோ... அப்பறவை உங்களை பார்க்க வந்ததுபோல் இருக்கு...
உங்கள் டிஜிட்டல் கண்களின் தரிசனம் எல்லைகளின்றி விரியட்டும்..
வாழ்த்துகள் திரு...
Superb!!
ReplyDelete